அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதிவியேற்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

206

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராக பதிவியேற்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலா, வரும் 9ஆம் தேதி முதலமைச்சராக பதிவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு அரங்கில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னை பல்கலைகழக வளாகத்தை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மேலும், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.