சென்னையில் நாளை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

412

சென்னையில் நாளை நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
ஆர்கே நகர் இடை தேர்தல் தேதி அறிவித்த நிலையில், நாளை அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் துவங்கும் ஆலோசனை கூட்டத்தில், அவைத்தலைவர் மதுசூதன் தலைமையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணைமுதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மாநில அமைச்சர்கள், நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்கே நகர் இடை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.