மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்..!

1290

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வரும் 3 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் கடத்தியது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல், பண்பாட்டு, பொருளாதாரத்தின் மையமாக விளங்கும் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கினை உரிய நேரத்தில் பெற்றிட காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் இன்றியமையாதது என்றும்,எனவே மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 3 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.