ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து, ஒருவர் கூட திமுகவில் சேராததற்கு, மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவையில் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் ஆய்வை திமுகவினர் விமர்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டினார்.