மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி அல்ல என்று மதுரை கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது அனைவருடைய போராட்டம் மற்றும் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார். தமிழ்நாட்டில் மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அதிமுக ஒருபோதும் கூறியதில்லை எனவும் மூர்த்தி தெரிவித்தார்.