20 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என இபிஎஸ் உறுதி..!

185

தமிழகத்தில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 20 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள இரண்டு தொகுதிகள்,மற்றதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.-க்களின் தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராகி வருகிறது. இதற்காக 20 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம், உள்ளிட்டோரும், தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விரிவாக ஆலோசனைகளை வழங்கினர். அப்போது பேசிய இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்று தெரிவித்தார். அதிமுக 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று உறுதிபட கூறிய அவர், இருபது தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் முனைப்பில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். .