ஜெயலலிதா 70-வது பிறந்தநாளையொட்டி, கோவையில் 70 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் ..!

394

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளையொட்டி, கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் பூச்சி அருங்காட்சியகத்தில், தொண்டாமுத்தூர் மக்களுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பிலான பவானி குடிநீர்த் திட்டம், உக்கடம் ஆற்றுக்கு 215 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மேம்பாலம் ஆகிய திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர், அதிமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு 70 வகையான சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் இன்று நடைபெற்றது,
தமிழில் மந்திரங்களைக் கூறி நடைபெற்ற இந்த திருமண விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணைமுதல்வர் ஓ.பன்னீ்ரசெல்வம் ஆகியோர் தாலியைக் கொடுத்து நடத்தி வைத்து, மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்தினர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் முன்னணித்தலைவர்கள் பங்கேற்றனர்.