அதிமுக பிளவு, அக்கட்சியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் : காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர்

198

அதிமுக பிளவுப்பட்டு நிற்பது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் விமர்சித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது, தீபா தொடங்கியுள்ள எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்பது கட்சியாகாது என விமர்சித்துள்ள அவர், இந்த அமைப்பு சசிகலாவிற்கு எதிராக பன்னீர்செல்வத்தின் கரங்களை பலப்படுத்துவதாக அமையும் என கூறினார். மேலும், அதிமுக 3 அணிகளாக பிளவுப்பட்டுக் கிடப்பது, தமிழக அரசு மற்றும் அதிமுக-வின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்தார்.