அதிமுகவுக்கு தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்று, சசிகலாவிடம் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தி உள்ளனர்.

282

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுகவுக்கு தலைமையை ஏற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இது தொடர்பாக வதந்திகளும் பரவி வருகின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் சசிகலாவை போயஸ் இல்லத்தில் இன்று பிற்பகல் சந்தித்தனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், செங்கோட்டையன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் அவரை சந்தித்து, அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று கோரினர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கழகத்தின் மையப்புள்ளியாக இருந்து தொண்டர்களை வழி நடத்தவும், தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.