அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் 27 அல்லது 29 ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

187

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் 27 அல்லது 29 ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அதிமுக வின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம், இம்மாத இறுதியில், வரும் 27 அல்லது 29 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியின் விதிகள் தளர்த்தப்பட்டு, அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால், இது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.