அ.தி.மு.க.வில் இணைவது குறித்து தொண்டர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும் – ஜெய் ஆனந்த்

884

தொண்டர்களிடம் கலந்து பேசி அ.தி.மு.க.வில் இணைவது குறித்து முடிவு எடுக்கப்படும் என திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள திவாகரன் இல்லத்தில் அவரது மகன் ஜெய் ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மதுரை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி வந்தவர்கள், திவாகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறினார். மேலும் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து தொண்டர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் எனக் கூறிய அவர், சசிகலா தினகரன் பக்கமா? திவாகரன் பக்கமா? என்பது அவர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகே தெரியும் எனவும் கூறினார்.