ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிப்பு!

4293

ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சரும் ,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், முதலமைச்சரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.