தேர்தலில் வெற்றி பெற கோயில்களில் வழிபாடு..!

161

படித்த இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை முன்வைத்து தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போடி நகர் பகுதியில் உள்ள, சாலை காளியம்மன் கோவில் மற்றும் திருமலாபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியபின்னர் பிரச்சாரத்தைத் தொடங்கிய ரவீந்திரநாத்குமார், தேர்தலில் வெற்றி பெற்றால் போடி- மதுரை ரயில்சேவையை விரைவில் கொண்டு வருவது, படித்த இளைஞர்களின் நன்மைக்காக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது, திண்டுக்கல்- லோயர்கேம்ப் ரயில் திட்டத்தை கொண்டு வருவது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார்.