தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய் கழகத்திற்கு வாரீர், தினகரன் அணியினருக்கு அதிமுக தலைமை அழைப்பு

320

தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய் கழகத்திற்கு வந்து சேருங்கள் என தினகரன் அணியினருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு, டிடிவி தினகரன் தலைமையில் தனி அணி செயல்பட்டு வருகிறது.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் அ.தி.மு.க. 9 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மக்களவைத் தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வியடைந்தது. இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில், தினகரன் கட்சியை இணைத்துக் கொள்ள அதிமுக தலைமைக் கழகம் ஆலோசித்து வருகிறது.

அதிமுகவுன் அதிகாரப் பூர்வ நாளேடான அம்மா பத்திரிகையில், கவிதை வடிவில் தினகரன் அணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கவிதையில், கூடாத இடம் சேர்ந்த கர்ணனை நினைத்துப் பார்த்து, தீய வழி விட்டு தூய வழிக்கு மாற மீண்டும் தாய்க் கழகத்திற்கு வந்து சேருங்கள் என கூறப்பட்டுள்ளது.