அதிமுக வை பாஜக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது-திருநாவுக்கரசர்!

396

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும், பெயரையும் எடப்பாடி அணிக்கு வழங்கவே பாஜக அரசு முயற்சி செய்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், சேகர் ரெட்டி உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவுகளை இது வரை வருமான வரித்துறை அறிவிக்கவில்லை என்றார். அரசியல் காரணங்களுக்காக பாஜக அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும், பெயரையும் எடப்பாடி அணிக்கு வழங்கவே பாஜக அரசு முயற்சி செய்து வருவதாக தெரிவித்த திருநாவுக்கரசர், இதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் அதிமுக அரசை கட்டுப்பாட்டில் வைக்க பாஜக நினைப்பதாக கூறினார்.