அதிமுக அரசை யாராலும் அசைத்து பார்க்க முடியாது : துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டம்.

298

அதிமுக அரசை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது தினகரன் தான் என தெரிவித்த அவர், தற்போது முதலமைச்சரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். அதிமுக அரசை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்றும் தம்பிதுரை திட்டவட்டமாக தெரிவித்தார்.