அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிரடியாக நீக்கி அவைத்தலைவர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.

599

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிரடியாக நீக்கி அவைத்தலைவர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவிற்கு கொடுத்த வாக்குறுதியான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மீறி சசிகலா நடந்து கொண்டதால், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கிரிமினல் குற்றங்களில் சம்மந்தப் பட்டிருப்பதாலும், அதிமுகவிற்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுசூதனன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறைந்த ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை மீறி அவரது விருப்பத்திற்கு மாறாக அதிமுகவில் இருந்து பல ஆண்டுகள் நீக்கி ஒதுக்கியுள்ள டிடிவி தினகரன் மற்றும் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை மீண்டும் இணைந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது இதன் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அதிமுக உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று அந்த அறிக்கையில் மதுசூதனன் கேட்டுக் கொண்டுள்ளார்.