அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

405

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ம் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதன்படி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் தொகுதியில் வி.பி. கந்தசாமியும், அரவக்குறிச்சி தொகுதியில், வி.வி.செந்தில் நாதனும், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ். முனியாண்டியும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகனும் போட்டியிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.