நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

76

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 16ம் தேதி காலை 10 அணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில் அதிமுக தொகுதி பட்டியல் , தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் பிரச்சார பணிகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.