முதுகெலும்பு இல்லாத அதிமுக அரசு : தூக்கி எறிய வேண்டும் என ஸ்டாலின் ஆவேசம்

104

முதுகெலும்பு இல்லாத அதிமுக அரசை தூக்கிய எறிய வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைந்ததை அடுத்து திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் திமுகவின் பொதுக்குழுவில் முறைப்படி அறிவித்தார். தலைவராக தேர்வான பிறகு முதன்முறையாக கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

இதேபோல் முதுகெலும்பு இல்லாத அதிமுக அரசை தூக்கி எறிய வேண்டும் என ஆவேசத்துடன் பேசிய அவர், அழகான எதிர்காலத்தை மெய்ப்பிக்க அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்தார்.