அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

242

முதலமைச்சர் பழனிசாமியை, அவைத்தலைவர் மதுசூதனன் இன்று திடீரென சந்தித்து பேசியது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ராயபுரம் கூட்டுறவு சங்கத் தோ்தலில், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்களே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. அண்மையில், மீனவ கூட்டுறவு சங்கத் தேர்தலின் போதும் ஜெயக்குமார் மற்றும் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியையும் அவர் சந்தித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மதுசூதனன் சந்திக்க பேசினார். அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களால் அதிமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து மதுசூதனன் புகார் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.