இரட்டை இலை சின்னம் வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.

215

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக, தினகரன், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில், சின்னங்கள் தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுத்து வருவதாகவும், அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தரப்புக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க, ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு இன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.