அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !

167

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், டி.டி.வி. தினகரனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அடுத்த வாரம் கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்தும், தொகுதியில் மேற்கொள்ளவேண்டிய பிரச்சனைகள் குறித்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்தார்.
இதேபோன்று, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்படி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.