அடிமைப் பெண் திரைப்படம் டிஜிட்டலில் வெளியீடு | ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.

482

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண் திரைப்படம் டிஜிட்டலில் வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பில் கே. சங்கர் இயக்கத்தில் உருவான தமிழ்த் திரைப்படம் அடிமைப் பெண். 1969 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தற்போது டிஜிட்டலில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜி.எஸ்.டி. பிரச்சினையால் திரையரங்குகள் காலியாக இருந்துவந்த நிலையில், அடிமைப் பெண் படத்தினால் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனது குறிப்பிடத்தக்கது.