சென்னையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

280

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றநிலையில், சென்னையில் டிடிவி தினகரன் தலைமையில் நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும், தினகரன் தலைமையை ஏற்க முடியாது என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் அறிவித்துள்ளநிலையில், துணைப்பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் கூடும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.