ஆதார் சேர்க்கை மையங்களில் வேலை வாய்ப்பு. அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு.

1464

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது, ஆதார் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
இதில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்ற விரும்புவோர், இந்நிறுவனத்தின் இணையதளமான www.tactv.in -ல் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்றுவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவு உள்ளீட்டாளருக்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
மேலும், www.tactv.in என்ற இணையதளத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆதார் சேர்க்கை மையங்கள் அமைத்தப்பின், தேவைக்கேற்ப, தரவு உள்ளீட்டாளர்களின் விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவர்.