நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு, ஜாமீன் வழங்க கேரளா…

400

நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்புக்கு, ஜாமீன் வழங்க கேரளா நீதிமன்றம் மறுத்துள்ளது.
திரைப்பட முன்னனி நடிகை பாவனா, கடத்தப்பட்டு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் ஓட்டலில் திலீப் சம்பாதித்த 400 கோடி ரூபாய் சொத்தையும் முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக மலையாள திரைப்பட இயக்குனர் பைஜை குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கு, ஜாமீன் வழங்க முடியாது என்று கேரளா அங்கமாலி நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நாள் காவலில் எடுத்து அவரை விசாரிக்க நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.