திரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை

291

சமூகத்தில் நிலவும் ஏற்றுத்தாழ்வுகளை களைவது குறித்த பாடங்களை தந்தை பெரியாரிடமிருந்து கற்றுக் கொண்டதாக நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற புத்தக் காட்சியின் இறுதிநாள் நிகழ்ச்சியில் பேசிய ரோஹிணி, பெரியாரிடமிருந்தும் அவரது நூல்கள் மூலமாகவும் வாழ்வியல் முறைகளை கற்றுக் கொண்டதாக கூறினார். பெண்ணாக பிறந்தால் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறிய அவர், சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் மரியாதைகூட திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.