நடிகை சவுக்கார் ஜானகியின் தங்கை பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி பெங்களூருவில் காலமானார்..!

772

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில் காலமானார். சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார் உள்ளிட்டோருடன் திரைப்படங்களில் ஜோடியாக நடித்தவர், நடிகை கிருஷ்ண குமாரி. உடல்நலக்குறைவால்
அவர் இன்று காலமானார். அவருக்கு வயது, 84. நடிகை சவுகார் ஜானகியின் தங்கையான இவர், நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தார். சிறந்த நடிகைக்கான ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளார். கிருஷ்ணகுமாரியின் மறைவுக்கு தெலுங்கு, கன்னடம், தமிழ் திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.