பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு !

349

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகை புவனேஸ்வரி குறித்து வெளியான செய்திக்கு நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, உள்ளிட்ட 8 பேர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதனைக் கண்டித்து உதகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சரத்குமார், சூர்யா உள்ளிட்ட 8 பேரும் சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து, 8 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில், பிடிவராண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்களின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உதகை நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.