தேர்தல் கூட்டணி குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது – சரத்குமார்

385

தேர்தல் கூட்டணி குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகா சரத்குமாருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியவர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் சீராவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகத் தெரிவித்தார். இதேபோல் நடிகர் சரண்ராஜ் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி நூறாண்டு காலம் நலமாக வாழ்ந்து, வரும் தேர்தலில் அவர் ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்தார்.