நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது நாளாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்து வருகிறார்.

290

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது நாளாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மகிழ்வித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாளான நேற்று கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் தங்கள் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய தலைவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது
தலைவரை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்துபோய் உள்ளனர்.