எதுபற்றியும் கவலை கொள்ளாமல் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகள் அரசியல்வாதிகள் -நடிகர் பார்த்திபன்!

380

மக்களின் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள் என்று அரசியல்வாதிகளை நடிகர் பார்த்திபன் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், யாகாவாராயினும் நாகாக்க, அன்னியர் மீது பல்போட்டு பேசிய வாக்கை காக்க என்று குறிப்பிட்டுள்ளார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள் திகழ்வதாக பார்த்திபன் சாடியுள்ளார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ரவுடிகள், முறைகேடானவர்கள் கையில் அதிகாரம் செல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் கூறியதை சுட்டிக் காட்டியுள்ள அவர், தண்ணீ, காற்றுக்கு கூட வரி விதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும் என்று கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.