2 வாரங்களில் காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்ததாக நடிகர் நாசர் தகவல்.

507

2 வாரங்களில் காவிரி மேலாண்மை அமைக்கப்படும் என தமிழக ஆளுநர் தங்களிடம் உறுதியளித்திருப்பதாக திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் அவர்கள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர், ஆளுநரிடம் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாகவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் மனு அளித்ததாக கூறினார். மனுவின் நகலை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளதாகவும், 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என ஆளுநர் உறுதியளித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்