ஆதாரத்தின் அடிப்படையில் சரத்குமார், ராதாரவி நீக்கம், நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக் விளக்கம்.

261

ஆதராத்தின் அடிப்படையிலேயே சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக, நடிகர் கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இருவரும், நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து எந்த ஆதாரங்களும் இன்றி தனிச்சையாக முடிவெடுத்துள்ளதாக சரத்குமார் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சரத்குமார், ராதாரவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.