பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராட்டு கூறியதற்கு பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்-நடிகர் கமல்ஹாசன் !

625

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நடிகர் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
கருப்புப்பணத்தை ஒழிக்கும் வழி, பொதுமக்கள் சிறு இடைஞ்சல்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ஆதரவளித்துள்ளார்.
பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்திய விதம் தவறு என்று கூறியுள்ள கமல்ஹாசன்,
தற்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அரசிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பாக பலவீனமான பதில்களே வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாராட்டு சொன்னதில் அவசரப்பட்டுவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் தற்போது கூறியுள்ளார்.
தவறுகளைத் திருத்தி ஆவன செய்வதும், முக்கியமாக அதை ஒப்புக்கொள்வதும் பெருந்தலைவர்களுக்கான அடையாளம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.