சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

183

தெலுங்கானா அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜீனியர் என்.டி.ஆரின் தந்தை நந்தமூரி ஹரிகிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் என்.டி.ராமாராவின் மூத்த மகன் நந்தமூரி ஹரிகிருஷ்ணா சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா மற்றும் கொம்மினேனி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நந்தமூரி ஹரிகிருஷ்ணா உயிரிழந்தார். HARIKRISHNAjpg2008-ல் தெலுங்கு தேசிய கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட இவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர் ஆவார். மைத்துனர் உயிரிழப்பை அடுத்து அனைத்து நிகழ்ச்சிகளையும் சந்திரபாபு நாயுடு ரத்து செய்ததாக கூறப்படுகிறது.