லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து , மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ..!

416

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில், தர்மபுரியை சேர்ந்த கிருஷ்ணா என்பவர், லாரியில் செங்கல் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநர்கள் கிருஷ்ணா, ஜகுபர் சாதிக், கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீரனூர் போலீசார் உடல்களை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.