மோசமான பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

264

மோசமான பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ஏற்பட்ட இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவிவரும் மோசமான பனி மூட்டம் காரணமாக அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், ஹரியானா மாநிலம் ரோக்தாக் நெடுஞ்சாலையில் சென்று கொண்ருந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் சென்ற 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மோசமான பனி காரணமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.