டிரக் மீது கார் மோதிய விபத்தில் 9 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

79

மகாராஷ்ட்ர மாநிலத்தில் டிரக் மீது கார் மோதி 9 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

புணே நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நேற்றுமாலை ராய்கார் கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஷோலாப்பூர் நெடுஞ்சாலையில் கடாம்வாக் என்ற கிராமத்தின் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரக் மீது பயங்கரமாக மோதியது. இதில், காரில் இருந்த 9 மாணவர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் யாவட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.