இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

313

எடப்பாடி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் புக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ். கட்டிடத் தொழிலாளியான இவர், தனது இரு சக்கர வாகனத்தில் எடப்பாடியிலிருந்து ஜலகண்டபுரத்தை நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கனரக லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பிரகாஷ்ராஜ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.