டிரக், கார் நேருக்கு நேர் மோதி விபத்து | 8 பேர் உயிரிழப்பு

103

சத்தீஸ்கரில் டிரக்கும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகன் தேசிய சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து நேரில் ஆய்வு கொண்ட மாவட்ட ஆட்சியர், விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.