லாரியும், மினிவேனும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

256

சங்கரன்கோவில் அருகே லாரியும், மினிவேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே லோடு ஏற்றிக்கொண்டு திருவேங்கடம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிவகாசியில் இருந்து அட்டை பெட்டிகளுடன் வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் லாரி மற்றும் மினி வேன் ஓட்டுநர்களான முருகன், காளிதாஸ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.