சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

114

குஜராத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் – அகமதாபாத் நெடுஞ்சாலையில், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. பாவல்யாலி பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரியின் மேல் பயணம் செய்த 19 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.