ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…

132

சேலம் அருகே ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் வழியாக கொண்டலாம்பட்டி பட்டர்விளை பாலத்தில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த தனசேகரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தனர்.