லேக் விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து..!

1277

தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது.