அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

485

தெலுங்கானா மலைப்பாதையில் தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஜெகதளா மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தறிகெட்டு ஓடியது. மேலும் பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 40 பேர் பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.