ஆட்டோ மீது உரசியபடி சென்ற கல்லூரி பேருந்து : ஆட்டோவின் ஓரத்தில் அமந்திந்த 1-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

438

கூவத்தூர் அருகே ஆட்டோ மீது தனியார் கல்லூரி பேருந்து உரசியதில் ஒன்றாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் வெற்றி. கல்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்த வெற்றி, வழக்கம் போல் ஆட்டோவில் சக மாணவர்களுடன் பள்ளிக்கு சென்றுள்ளான். கூவத்தூர் அருகே காத்தான்கடை என்ற இடத்தில் வந்த தனியார் கல்லூரி பேருந்து திடீரென ஆட்டோவை உரசியபடி முந்தி சென்றது. இதில் ஆட்டோ ஓரத்தில் அமர்ந்திருந்த வெற்றியின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த மற்ற அனைவரும் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த வெற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் செல்லும் வழியிலேயே வெற்றி பரிதாபமாக உயிரிழந்தான்.