கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!

411

திருச்சி – மணப்பறை அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள துரைமங்களம் மணியம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் தனது மனைவி மற்றும் மருமகனுடன் மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் மணப்பாறை அருகேயுள்ள யாகபுரம் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் கார் உருண்டு அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் வெள்ளையன் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.