தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழப்பு..!

221

சென்னை சேத்துப்பட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர், ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமீபகாலமாக ரெயில் விபத்துக்கள் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தாம்பரத்தில் இருந்த வந்த மின்சார ரெயில் மோதி, 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர்கள் கிஷோர் குமார், முனிவேல் என்பது தெரியவந்துள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, ரெயிலில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.